Search using this query type:

Search only these record types:


Advanced Search (Items only)

எங்கள் குழு | Our Team

The Jaffna Protestant Digital Library team currently consists of six people.

மார்க் Mark E. Balmforthபலம்ஃபோர்த்: யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகத்தின் முகாமையாளர் மற்றும் கொலம்பியப் பல்கலைக்கழக மதத்துறையில் கலாநிதிப்பட்டத்திற்குத் தெரிவானவரும் ஆகும். அவரது தற்கால ஆய்வானது இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காலனித்துவக் கல்வி, சமூக அடுக்கமைவினுடைய பேணுகை மற்றும் காலனிய அகவயத்தன்மைகளின் உற்பத்தி மீது குவிவுகொண்டுள்ளது. இவர் தனது கலைமாணிப்பட்டத்தினை 2010 இல் வொஷிங்டனில் கருத்துக்களின் ஒப்பீட்டு வரலாற்றிலும் தனது முதுமாணிப்பட்டத்தினை 2015 இல் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் சமயம் மற்றும் தென்ஆசியக்கற்கைகளில் பெற்றுக்கொண்டதோடு, 2016இல் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் சமயத்துறையில் ஆய்வுநிலைப் பட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளார். 

Mark E. Balmforth is a Program Manager for the Jaffna Protestant Digital Library and PhD Candidate in the Religion Department at Columbia University. His research is currently focused on colonial education, the maintenance of social hierarchy, and the production of colonial subjectivities in Sri Lanka’s Jaffna Peninsula. He holds a BA degree in the Comparative History of Ideas (Washington, '10), MA degrees in Religion and South Asian Studies (both Columbia, '15), and an MPhil degree in Religion (Columbia, ‘16).

 

Henria Aton

ஹென்றியா அதோன்: யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகத்தின் முகாமையாளராகும். இவர் 2017இல் எம்சிஹில் பல்கலைக்கழகத்தில் ஆசியசமயங்கள் பற்றிய கற்கையில் முதுமாணிப் பட்டத்தினை நிறைவுசெய்துள்ளார். அவரது ஆராய்ச்சிக்கட்டுரையானது தமிழ்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கத்தோலிக்க மறைபரப்புசங்கங்கள் அத்துடன் அறிவுற்பத்தி ஊடறுப்புக்கள், சாதி, இந்திய இயேசு சபைக் கட்டளைகளின் வளர்ச்சி ஆகியவற்றின் மீது குவிவுகொண்டுள்ளது. அண்மையில் எட்டு மாதங்கள் மதுரையில் கழித்துள்ளதோடு இந்தியக்கற்கைகளுக்கான அமெரிக்க நிறுவகத்தில்(AIIS) தமிழ் கற்றுள்ள இவர் தற்பொழுது தனது தமிழ் மொழிக்கற்கைகளினை இலங்கைக்கற்கைகளுக்கான அமெரிக்க நிறுவகத்தின்(AISLS) நிதியுதவியுடன் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துவருகின்றார். யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணக்காப்பகத்துடனான வேலையினால் தூண்டப்பட்ட இவர் அடுத்தவருடம் தனது கற்கைகளினையும் ஆவணகக்கற்கையில் பெற்றுக்கொள்வதற்க்குத் திட்டமிட்டுள்ளார். 

Henria Aton is a Program Manager for the JPDL. She completed her MA degree in religious studies at McGill University in 2017. Her thesis focused on a 19th-century Catholic mission in Tamil Nadu and the development of an Indian Jesuit order. Henria recently spent eight months in Madurai studying Tamil at the American Institute of Indian Studies (AIIS), and is currently taking Tamil classes with the support of an American Institute for Sri Lankan Studies (AISLS) language grant. Inspired by her work with the JPDL, Henria plans to pursue doctoral work in archival studies next year.

 

Stephan

ஸ்ரிபன் கனகலிஙகம்: யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகத்தின் செயற்றிட்ட இணைப்பாளராகும். கண்டி சில்வஸ்டர் கல்லூரியில் தனது கல்வியை முடித்துக்கொண்ட இவர் தனது கணினி டிப்ளோமாக் கற்கைகளினை புத்தளத்தில் நிறைவுசெய்து அங்கு குளோபல் கீ நிறுவனத்தில் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரை அறிவுறுத்துனராகப் பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐக்கிய அரபுராச்சியத்தில் பல்தேசியக்கம்பனி ஒன்றில் பணியாற்றிய பின்னர் கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணத்தின் முன்னணியான பதிப்பகங்களில் ஒன்றான கரிகணன் பதிப்பகத்தில் வாடிக்கையாளர் சேவை அலுவலர் மற்றும் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். முன்னைய நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளரான ஸ். கிருபாலினி நிகழ்ச்சித்திட்டத்தினை விட்டு விலகும்போது அவரது பொறுப்புகளினை ஆற்றுவதற்கான பயிற்சிகளினைப் பெற்றுக்கொண்டு 2017 யூலையில் யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து ஆவணக் காப்பகத்தில் செயற்றிட்ட இணைப்பாளராக இணைந்து கொண்டார்.

Stephan Kanagalingam is Program Coordinator for the JPDL. He finished his education at Kandy St.Sylvester College, and subsequently followed a Diploma computer course. He worked as an Instructor in computer courses at the Global Key Institute in Puttalam from 2003 to 2006. Between 2006 and 2012, Stephan worked at Masafi Mineral Water Co., a multinational company in Dubai. For the last five years, Steev worked as a Customer Care Officer and Secretary at Harikanan Printers, one of the leading printers in Jaffna. He joined the JPDL in July 2017 and has been trained by previous Coordinator S. Kirubalini to replace her when she leaves.

   

Pakiyanathan Kirubalini

ஸ்ரிபன் கிருபாலினி: யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகத்தின் செயற்றிட்ட இணைப்பாளராக நவம்பர் 2016 தொடக்கம் யூன் 2017 வரை பணியாற்றிய இவர் தன்னுடைய கற்பித்தல் மற்றும் கற்கைகளினைத் தொடர்ந்து வரும் அதேவேளை இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான அறிவுரைகளினையும் தொடர்ந்து வருகின்றார். 2013இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைவரலாற்றுத்துறையில் தனது கலைமாணிப்பட்டத்தினைப் பூர்த்தி செய்துள்ள இவர் அதனைத்தொடர்ந்து நுண்கலைத்துறையில் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதோடு, தற்போழுது வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். அண்மையில் ஆசிய ஆவணகக் காப்பகத்தின் நூல்விபரத்திரட்டு செயற்திட்டத்தில் களஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார்.

Kirubalini Stephan was Program Coordinator for the JPDL between November 2016 and June 2017. She completed her BA in Art History and Aesthetics from Jaffna University in 2013. She previously worked as a Temporary Lecturer in the same department and is currently a Visiting Instructor at Jaffna University. She recently worked as a field researcher for the Bibliography Project of the Asia Art Archive. Kiruba continues to advise the program while pursuing teaching and graduate responsibilities.

  

Sutharshini

சுதர்சினி ராமகிருஸ்ணன்: யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகத்தின் செயற்திட்ட உதவியாளராகும். இவர் 2016இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைவரலாற்றுத்துறையில் தனது கலைமாணிப்பட்டத்தினை பூர்த்தி செய்துள்ள இவர்  ஓர் களஆய்வு நிகழ்ச்சித்திட்டத்தில் பணயாற்றியுள்ளார் அதில் இலங்கையின் மத்தியபகுதியில் உள்ள நிக்கவட்டானா முஸ்லீம் கிராமத்தின் தொட்டுணரமுடியாத மரபுரிமைகள் பற்றிய தரவுச்சேகரிப்பினைச் செய்துள்ளார், அத்தோடு மத்திய பண்பாட்டு நிதியத்தினுடைய சீகிரியா அருங்காட்சியகத்தில் ஓர் செயன்முறைப் பயிற்சித்திட்டத்தினையும் நிறைவு செய்துள்ளார்.

Sutharsini Ramakirushnan is Program Assistant for the JPDL. She obtained her BA in Art History from Jaffna University in 2016. She has previously worked in a field research program, collecting data about intangible heritage in Nikavatavana, a Muslim village in the east of Sri Lanka. She has also completed a practical training program at the Sigiriya Museum of the Central Cultural Fund.

 

Mirusha

மிருசா குமாரகுலசிங்கம்: மிருசா யாழ்ப்பாணப் பரட்டஸ்தாந்து ஆவணக் காப்பகத்தில் எண்ணிமப்படுத்துனராக பணியாற்றுகின்றார். இவர் 2017ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் இதழியல் டிப்ளோமா கல்வியைப் பூர்த்தி செய்துள்ளார். டான் தொலைக்காட்சி, வலைத்தள வானொலி ஆகியவற்றில் நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும், தினக்குரல் பத்திரிகையில் செய்தியாளராகவும் பயிற்சிகளினைப் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இதழியல் புத்தாக்க பயிற்சிகளிலும் பங்குபற்றியுள்ள இவரது  அண்மைய ஆய்வுக் கட்டுரைகள் 'யாழ் நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பத்திரிகை வாசிப்பு' மற்றும் 'புராதன வரலாறு கூறும் ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதில் ஏற்படும் இடர்பாடுகள்' ஆகியனவாகும்.

Mirusha Kumarakulasingham is a Digitizer for the JPDL. She completed her Diploma at the Media Resource Training Centre of the University of Jaffna in 2017. She received training and worked as a news reporter and anchor at DAN TV, at online radio stations, and at the Thinakkural newspaper. In 2011, she also studied Indian media resources at Madras University in Chennai, India. She has written two research papers as part of her work: “Use of Newspaper among Jaffna Municipal Students,” and “Difficulties in Digitizing of Ancient Documents”.